சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain rain

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.