முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் சந்திரகுமார்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 1,14,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1, 14,439 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகளும் பெற்றனர். திமுக 90,629 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்தது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏவாக இன்று பதவியேற்றார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றார். சந்திரகுமாருக்கு, சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


