“கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

 
ச் ச்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆரம்ப காலத்தில் இருந்து விஜயகாந்த் குடும்பத்துடன் மிகுந்த இணக்கமாக இருந்து வருகிறோம்.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்” என்றார்..