சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

 
train

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

train

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு அக்.29-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

train

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31, நவ.1,2, 3 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு அக்.29-ம் தேதி இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.