தமிழ்நாடு காங்.தலைமையில் மாற்றம்?? கே.எஸ்.அழகிரி பதவி பறிக்கப்படுகிறதா? - பரபரப்பு தகவல்..

 
ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்து வரும் நிலையில், புதிய தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இந்தியாவில்  2024 நாடாளுமன்றத் தேர்தலும், அதற்கு முன்னதாக  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தலும் வர உள்ளது.  இதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  அந்தவகையில் அண்மையில் கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்ற மற்ற மாநிலங்களிலும்,  வெற்றியை நிலைநாட்டவும்,  நாட்டாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடும் முனைப்புடனும் பணியாற்றி வருகிறது.  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

Rahul and Kharge

அதன் ஒரு பகுதியாக  சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்  பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் கட்சி மாநில தலைவர்களை மாற்ற  தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பட்டியலில்  தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தமிழக தலைமையில்  மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.