தமிழக கோயில்களில் பிரசாத விலை மாற்றம்

 
இன்று பங்குனி உத்திரத்தினையும் பாதித்த கொரானா -உற்சாகமின்றி, களையிழந்த பழனி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலை மற்றும் தரம் தொடர்பாக புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக  தற்போது வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  டி.ஜி.வினய்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 1.11.2026 முதல் இந்த புதிய விலைப்பட்டியல் நடைமுறைக்கு வருகிறது.


இதுவரை பெரும்பாலான கோயில்களில் பிரசாத ஸ்டால்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, வெளியிடங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. எங்கு, எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. தரமில்லை என பக்தர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். நெய், எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரசு 10 வகை பொதுவான பிரசாதங்களுக்கு Uniform Quality, Quantity and Price என்ற மாஸ்டர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இனி கோயில் வளாகத்திலேயே, ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு கடை பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும்.

இந்த 10 வகை தவிர, பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிறப்பு வாய்ந்த, தனித்தன்மை கொண்ட பிரசாதங்கள் இருந்தால், அந்தந்த திருக்கோயில்கள் தனியாக செலவு கணக்கு தயாரித்து இணை ஆணையர் / கூடுதல் ஆணையர் / ஆணையர் அளவில் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் எனவும், பேக்கிங் கவர்களில்  உற்பத்தியாளர் பெயர், எடை, தயாரிப்பு தேதி, MRP கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.!