செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து!

 
Chembarambakkam

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று மழையுடன் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.  சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

rain

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.  வார விடுமுறை ஒட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் படையெடுத்த நேரத்தில்,  கனமழை பெய்ததால் மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

chembarambakkam lake - செம்பரம்பாக்கம் ஏரி

இந்நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் 980 கன அடியானது. ஒரே நாள் இரவில் ஏரிக்கு 72 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளது. நீர் இருப்பு 1497 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.