சென்னை 384: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக மாற்ற கடுமையாக உழைப்போம்!

 
pmk pmk

இந்தியாவின் வளர்ச்சியடைந்த  மாநகராக சென்னை மாற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

tn

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது.

tn

சென்னை நாள் கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது; சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி. சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக சென்னை மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.