10 நிமிடத்தில் உணவு டெலிவரி; அப்போ டிராஃபிக் ரூல்ஸ்?? - சொமாட்டோவிடம் விளக்கம் கேட்ட சென்னை போலீஸ்...

 
10 நிமிடத்தில் உணவு டெலிவரி; அப்போ டிராஃபிக் ரூல்ஸ்?? - சொமாட்டோவிடம் விளக்கம் கேட்ட சென்னை போலீஸ்...

10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற  அறிவிப்புக்கு சொமாட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவக்துறை விளக்கம் கேட்டுள்ளது.

 நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ (Zomato) 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை  சோமேட்டோ நிறுவனத் தலைவர் திபீந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். விரைவில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும்,  இதன் மூலம்  குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.  சொமாட்டோ நிறுவனரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரியாணி

10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்றால் அப்போ டிராபிக் ரூல்ஸ் எல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சா?? இதனால்  சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்படும் என்றும், மேலும் உணவு டெலிவரி செய்யும் நபருக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர்.  மேலும் இந்த புதிய சேவையில்  பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் , சொமாட்டோ நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதற்கு சொமாட்டோ நிறுவனர்,  இந்த சேவை அனைத்து உணவுகளுக்கும் இல்லை என்றும் பிரியாணி, ஆம்லெட் போன்ற சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு மட்டுமே இந்த 10 நிமிட டெலிவரி சேவை பொருந்தும் என்றும்,  ஒருவேளை தாமதமாக உணவு டெலிவரி செய்தால் அதற்காக அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் தெரிவித்தார். அதேபோல் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்பவர்களுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ. 1,00,000 அபராதம் ! சுகாதாரம் இல்லாததால் மாநகராட்சி அதிரடி!

30 நிமிட டெலிவரிக்கு இருக்கும் அதே பாதுகாப்பு 10 நிமிட டெலிவரியிலும் இருக்கும்  என நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்றும், இன்றைய தொழில்நுட்பத் துறையில் நிலைத்திருக்க, புதுமைகளை அறிமுகப்படுத்துவது, தொடர்ந்து முன்னேறுவதும் முக்கியம் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில்   பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தச் சூழலில்,  சொமாட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. முறையான விளக்கம் கொடுப்பதற்கு முன்னாள் இந்த சேவையை தொடர்ந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.