சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை!

 
Ac Ac

சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது. 

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 19ம் தேதி முக்தல் புறநகர் ஏ.சி. ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையில் புறநகர் ஏ.சி. ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் குளிர்சாதன ரயில், காலை 8.35-க்கு செங்கல்பட்டு சென்றடையும். புறநகர் ஏ.சி. ரயிலில் குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 ஆக கட்டணம் நிர்ணயம். கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரூ. 105, கடற்கரை தாம்பரம் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - எழும்பூர் இடையே ரூ.60, செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரூ.85ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சென்னை புறநகர் ஏசி ரயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை 
பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் உறுதிபட தெரிவித்துள்ளது. புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ்அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் கருத்துகளை 6374713251 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
 வைத்துள்ளனர்.