சென்னையில் சோகம்! ஐபிஎல் பார்த்துவிட்டு சென்ற 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலி
Mar 24, 2025, 11:56 IST1742797576951
சென்னையில் ஐ.பி.எல் போட்டி பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டி பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய 2 கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர் மெட்ரோ தூணில் அதிவேகமாக பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


