சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...ஏர் இந்தியா விமானத்தில் எந்திர கோளாறு!

 
air india air india

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எந்திரக் கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிலு ஏர் இந்தியா விமானம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை வழங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமான புறப்பட்டது. 172 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் எந்திர கோளாறு கண்டறியப்பட்ட உடனேயே விமானி அவசரமாக ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தினார். இதனால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டவில்லை. விமானியின் சாமர்த்தியத்தால் 172 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனால் டெல்லிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகியது. எந்திர கோளாறு காரணமாக விமானம் தாமதமாக இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.