சென்னை விமான நிலைய பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம், மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம், மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.
— Chennai (MAA) Airport (@aaichnairport) November 30, 2024
இதன் மூலமாக நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கி, பயணிகள் மோசமான வானிலையிலும் தாங்கள் பயண… pic.twitter.com/VAAp413BHe
இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம், மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலமாக நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கி, பயணிகள் மோசமான வானிலையிலும் தாங்கள் பயண இலக்கை எவ்வித சிக்கலின்றி சென்றடைவதை உறுதி செய்து வருகிறது.