சென்னையில் அதிர்ச்சி சம்பவம்...உதவி பேராசிரியர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
சென்னை மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர் மர்மமான கழுத்தில் கவர் சுற்றிய படி வீட்டின் கழிவறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பிரகார் குமார். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரகார் குமார் வீட்டின் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலையில் பாலித்தீன் கவர் சுற்றிய நிலையில், கழிவறையில் பிணமாக கிடந்துள்ளார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த் வந்த போலீசார் பிரகார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரகார் குமார் பணியாற்றும் தனியார் கல்லூரியில் அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அவருடன் நெருக்கமானவர்களிடம் விவரங்களை சேகரித்து வருகின்றனர். கல்லூரி உதவி பேராசிரியர் மர்மமான கழுத்தில் கவர் சுற்றிய படி வீட்டின் கழிவறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


