சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாடு மற்றும் மறு சீரமைப்பு பணி காரணமாக காலை 7 மணி முதல் இரவு 8மணி வரை கடற்கரை மார்க்கமாக புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் ரயில் நிலையம் நடைமேடை 1-2 மற்றும் யார்டு பகுதியில் நடைபெறும் மறு சீரமைப்பு, புதிய நடைமேம்பால பணி காரணமாக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை மார்கமாக புறப்பட்டு செல்லும் ரயில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் புறப்பட்டு பல்லாவரம் வரை வந்துவிட்டு மீண்டும் மறுமார்கத்தில் சென்னை கடற்கரைக்கு செல்லும். அதே ரயில்கள் செங்கல்பட்டு மார்கமாக செல்லும் மின்சார ரயில்கள் மட்டும் தாம்பரம் ரயில் நிலையத்தில் 3-4 நடைமேடை வழியாக செல்லும் ஆனால் நீண்ட காலதாமத இடைவெளியில் செல்லும்,
இதேபோல் காஞ்சிபுரம் திருமால்பூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் நடைமேடை 3-4 நின்று பயணிகளை ஏற்றி செல்லும். இதனால் ரயில் பயணிகள் பதிக்கப்பட்டுள்ளனர். அதே வேலையில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இருமார்க்கத்திலும் மாநகர பேருந்துகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார், காவலர்கள் சாலை போக்குவரத்தை ஒழுங்கு செய்து சீர்படுத்திவருகிறார்கள்.