சென்னை : பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே ஓட்டுநருக்கு மாரடைப்பு.. இருவர் பலி..!!
சென்னையில் பேருந்து ஓட்டியபோதே மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த போதே ஓட்டுநர் வேலுமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து கார்கள் மற்றும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார்.

ஓட்டுநர் வேலுமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அடுத்தடுத்து 4 கர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் மருத்துவமனயில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


