சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.. மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்..

 
சென்னை மாநகராட்சி பட்ஜெட்  இன்று தாக்கல்..  மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்..


சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்  திமுக ஆட்சிக்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படாததால், நேரடி பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட வில்லை. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தி , மாநகராட்சிகளுக்கு மேயர்,  வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்கு  இரண்டாவது நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று   தாக்கல் செய்யப்படுகிறது. ரிப்பன் மாளிகை மாமன்ற அரங்கில் காலை 10 மணிக்கு பட்ஜெட் வாசிக்கப்பட உள்ளது.  

சென்னை மாநகராட்சி

முன்னதாக  2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம்  67 முக்கிய அறிவுப்புகள் வெளியிடப்பட்டு  அவற்ரில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.  ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 70 மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெறும்  என்று கூறப்படுகிறது.  இது மேயர் பிரியா தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில்,   து மாநகராட்சியின் வசம் கொண்டு வரப்பட்ட புறநகர்  பள்ளிகளில் கட்டமைப்பை தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்களும்,  சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய  சாலை வசதிகள், புதிய பொது கழிவறைகள் அமைப்பது போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நாளை முதல்  பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.