அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்தது.

gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  நேற்றும் சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை கிராம் ரூ.46,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5790 ஆக விற்பனையாகி வருகிறது.