தங்கம் விலை சவரன் ரூ.400 உயர்வு!
May 24, 2025, 11:56 IST1748067974696
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 8,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கும், ஒரு கிராம் ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,940க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


