#BREAKING காலையில் ஆறுதல் மாலையில் ஷாக்! தங்கம் விலை அதிரடி உயர்வு
Feb 6, 2026, 17:00 IST1770377454542
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டது என மக்கள் அச்சமடைந்த நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 580 ரூபாய் விலை குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 4,640 விலை குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.14,120-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாலை அதிர்ச்சி தரும் விதமாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.130 அதிகரித்து ரூ.14,250-க்கு விற்கப்படுகிறது.


