#BREAKING | மீண்டும் உயர்வு! வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டியது

 
gold gold

சென்னையில் ஆபரன தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,160 கூடியது

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,515க்கும் ஒரு சவரன் ரூ.1,00,120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் விலை அதிகரித்து கொண்டே சென்றது. சென்னையில், இன்று காலை  ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ரூ.12,460-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.99,680-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.1,00,120 க்கு விற்கப்படுகிறது.