சென்னை ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

 
சென்னை ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து சென்னை ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை அண்ணாநகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 60 தீயணைப்பு வீரர்கள் 2:30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


சென்னை அண்ணாநகர் பன்னிரண்டாவது மெயின் ரோட்டில் ஜிஎஸ்டி ஆணையரகம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8:30 மணிக்கு தரைதளத்தில் உள்ள கேண்டினில் தீ பிடித்தது. தீ மளமளவென , பெண் அதிகாரிகள் ஓய்வறை மற்றும் இதர அறைகளுக்கு பரவியது. தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா தலைமையில் 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 60 தீயணைப்பு வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள், கேண்டினில் இருந்த பாத்திரங்கள், மின்னணு உபகரணங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா ?அல்லது சதிச்செயலா? என திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடவியல் துறை அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.