சென்னை மாநாகராட்சி, சி.எம்.டி.ஏ.க்கு அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தனியார் மருத்துவமனை நிர்வாகம் இரவு நேரங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ உள்ளிட்டவற்றிற்கு அபராதம் வித்தித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் இரவு நேரங்களில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனைக்கான திட்ட அனுமதி விண்ணப்பம் நிலுவையில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், திட்ட அனுமதி விண்ணப்பம் நிலுவையில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு என மொத்தமாக ரூ. 32 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சமும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு ரூ. 5 லட்சமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 2 லட்சமும், தனியார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபாரம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.