ஈபிஎஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

 
high court high court

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக எம்.பி தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாக செலவு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்த நிலையில், இதனை எதிர்த்து தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிராக திமுக எம்பி தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தயாநிதிமாறன் எம்.பி., ஏப்ரல் 4ம் தேதிக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.