அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!
Feb 18, 2025, 14:05 IST1739867738469
சென்னையில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் அனுமதியின்றி சில வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வணிக கட்டிடங்களை இடிக்க கோரி CMDA சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக CMDA அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக கட்டுமான நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில், தியாகராயர் நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதி மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


