அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்!

 
high court

அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் வசூல் வேட்டை நடத்துகின்றன. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் பணம் செலவழித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் ரூ,3000 முதல் 4000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்படும் நிலையில், போக்குவரத்து துறை தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருந்த போதிலும் அதிக கட்டணம் வசூல் செய்வது வாடிக்கையாகி வருகிறது. 

இந்த நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்த திட்டம் என அரசுத் தரப்பு பதில் அளிக்கப்பட்டுள்ளது.