ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்ற தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு...

 
ஏர் இந்தியா விமானம்

 டாடா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் தடைவித்துள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸின் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம்  அறிவித்தது.  ஆனால் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்க தடை விதிக்கக்கோரி, ஏர் கார்பரேஷன் ஊழியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. 

டாடா

அதில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம் தற்போதை ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் ஏர் இந்தியா குடியிருப்புகளை காலி செய்வது பற்றி ஊழியர்களிடம் உத்திரவாதம் பெற அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். 

மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?!..

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஏர் இந்தியா நிறுவன குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களை வெளியேற்றவும், மருத்துவ சேவைகளை நிறுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டார்.  மேலும், மத்திய அரசு, ஏர் இந்தியா மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை ஜனவரி 7ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.