"மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?"- ஐகோர்ட் கேள்வி

 
பட்டாசு

மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

70 cracker shops in Theevu Thidal,சென்னை தீவுத்திடலில் 70 பட்டாசு கடைகள்:  இன்று முதல் விற்பனை தொடக்கம்! - 70 cracker shops in theevu thidal and sales  started today - Samayam Tamil

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்பினர். காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது என கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.

Madras High Court - Wikipedia


சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு தடை விதித்த உத்தரவை மீறியதாக சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில்  சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.