மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

 
bus

நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படவுள்ளன. 
  
கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,  கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை, நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள நீதிமன்றம்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்தும் இயக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்தது. ஆன்லைன், மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியது. 

இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படவுள்ளன. மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படுகின்றன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.