மழை நீர் வடிகால்வாயில் சிக்கிய தண்ணீர் டேங்கர் லாரி!
May 10, 2025, 15:02 IST1746869532632
சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு பெரும்பாலான குடிநீர் லாரிகள் மூலமாகவும், குழாய்கள் மூலமாகவும் விநியோகம் செய்யபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை துரைப்பாக்கம் அருகே குடிநீர் லாரி ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது. துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது. மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது. ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.


