குழந்தையின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்...சென்னையில் பரபரப்பு!

 
manja

சென்னையில் இருச்சக்கர வாகனத்தில் பெற்றோருடன் சென்ற குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை காயம் அடைந்தது. 

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மாஞ்சா நூலை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் சட்டத்திற்கு புறம்பாக மாஞ்சா நூல் தயாரித்து பட்டம் விட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கொடுங்கையூரில் ஒரு தம்பதி தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டுள்ளனர். மாஞ்சா நூல் வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், இதனையறியாமல் இருசக்கர வாகனத்தில் பெற்றோருடன் சென்ற குழந்தையின் கழுத்தை அறுத்தது. 

இதில் குழந்தையில் கடுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக பெற்றோர் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாஞ்சா நூல் விவகாரத்தில் இரு வேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் மொத்தம் 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
100க்கும் மேற்பட்ட பட்டங்கள், லொட்டாய் மற்றும் மாஞ்சா 
நூல்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை 
நடத்தி வருகின்றனர்.