சென்னை மெரினாவில் 3வது நாளாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மெரினா கடல் 3வது நாளாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புயல் 30ம் தேதி கரையை கடக்கும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மெரினா கடல் 3வது நாளாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 3 முதல் 5 அடி வரை அலைகள் ஆக்ரோஷமாக மேலெழும்புகின்றன. கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசி வரும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.