நாளை சர்வதேச பெண்கள் தினம் - சென்னை மெட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!!

 
tn

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெண்களின் கலாச்சார ,அரசியல் மற்றும் சமூக பொருளாதார சாதனைகளை நினைவு கூறும் வகையில் மார்ச் 8ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது . சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,  ஜியோ இந்திய அறக்கட்டளையுடன் இணைந்து மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.  வொண்டர் வுமன் பெஸ்ட் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை காலை 11 மணி முதல் மகளிர் தின கொண்டாட்டத்தை தொடங்குகிறது.  மகளிர் தின கொண்டாட்டத்தின் போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 900 மீட்டர் தூரம் நடைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் திருவான்மியூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் .ஜியோ இந்திய அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

metro

அத்துடன் வொண்டர் வுமன் கேர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஜியோ இந்திய அறக்கட்டளையுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் பழங்குடி சமூக மக்கள் கிராமப்புற மேம்பாட்டு மையத்தில் சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ, அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ, வடபழனி மெட்ரோ ,விம்கோ மெட்ரோ தேனாம்பேட்டை மெட்ரோ, கிண்டி மெட்ரோ ஆகிய ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயணிகள் மற்றும் மற்ற ஊழியர்களின் நலனுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

metro

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் மருத்துவ முகாமில்  பொது மருத்துவம் பல் மருத்துவம் மகளிர் நோய் மருத்துவம் ஆகியவை நடத்தப்படும் .மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு சலுகை நாப்கின்கள் வினியோகம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து வண்டலூரில் உள்ள ஊரக வளர்ச்சி மையத்தை சேர்ந்த குழந்தைகள் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும்,  மீண்டும் விமான  நிலையத்தில் இருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் இலவசமாக பயணிக்கிறார்கள்.