போலீசார் ஒப்படைத்த‌து போலி வைரக்கல் - வைர வியாபாரி புகார்

 
Police Police

போலீசார் ஒப்படைத்தது போலியான வைரக்கல் என வைர வியாபாரி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 



 

கடந்த 4ஆம் தேதி வடபழனியில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவரை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துவிட்டு சென்றது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கொள்ளையடித்த மர்ம கும்பல் 4ஆம் தேதி இரவே கைது செய்யப்பட்டது. கொள்ளை கும்பலை சேர்ந்த 5 நபர்களை கைது செய்த போலீசார், 8ஆம் தேதி நீதிமன்றத்தில் வைரக்கல்லை ஒப்படைத்தனர்.



 

இந்த நிலையில், போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்த‌ ரூ.23 கோடி வைரக்கல் போலியானது என வைர வியாபாரி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். காவல் நிலைத்தில் உண்மையான வைரக் கல்லை கேட்டபோது, போலீசார் மிரட்டியதாகவும் வைர வியாபாரி சந்திரசேகர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.