தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு!

 
school school

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டது. 

திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுவிட சிரமம், வாந்தி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில், சிலர் மயக்கமடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வாயுக்கசிவால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அந்த தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 10 நாட்களுக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு அதிகரித்து வருகிறது.