சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை....ஒரு மணி நேரத்தில் 10செ.மீ மழை!

 
rain rain

சென்னையின் பல்வெறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் (நண்பகல் 1-3 மணி) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதேபோல், 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. 

rain

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், கோயம்பேடு, தரமணி, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், அண்ணாநகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 10 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.