சென்னையில் ஜார்க்கண்ட் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது!
May 13, 2025, 12:42 IST1747120339246
சென்னையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சென்னையில் வேலை நிமித்தமாக சென்னையில் தங்கியிருந்தார். இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த இளம்பெண்ணை ஏமாற்றியுள்ளனர். ஐதராபாத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றுத் தருவதாக ஏமாற்றி, சென்னையில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய், ஹரி ஆகிய இருவரும் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணை, நிஜாம்பேட்டையில் உள்ள தங்களது பிளாட்டுக்கு அழைத்துச் சென்ற, மது கொடுத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.பெண்ணின் புகாரின் பேரில் பச்சுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.


