சென்னை வைர திருட்டு வழக்கு - தூத்துக்குடியில் 4 பேர் கைது !
May 5, 2025, 13:33 IST1746432225682
சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை திருடி சென்ற 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது.
சென்னை வடபழனியில் நகை வியாபாரி ஒருவர் வைர விற்பனை தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வைர வியாபாரியை கட்டிப்போட்டு வைரத்தை திருடி சென்றுள்ளனர். 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை அந்த கும்பல் திருடி சென்றுள்ளது. இது தொடர்பாக வைர வியாபாரி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார், கொள்ளை கும்பலை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்தனர்.
இந்த நிலையில், நகை வியாபாரியை கட்டி போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை திருடி சென்ற 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது. வைரத்தை திருடி காரில் தப்பிய கும்பலை பிடிக்க
சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், தூத்துக்குடி சுங்க சாவடி அருகே அந்த கும்பல் கைது செய்யப்பட்டது.


