அரசு கண்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர் படம்!
சென்னையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஓவிய கண்காட்சியில் காவி நிறத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுர்வர் சிலை வெள்ளி விழா தமிழக அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு விதமான திருவள்ளுவர் படங்களை வரைந்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கண்காட்சியில் காவி நிறத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் ஒருவர் திருவள்ளுவரின் முழு உருவ சிலையை காவி நிறத்தில் வரைந்தது அதனை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், அந்த படம் தற்போது கண்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைய வேண்டாம் என மாணவர்களிடம் கூறியுள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.


