வெளிநாட்டு பெண்ணிடம் ஆபாச பேச்சு! ரூ.30 ஆசைப்பட்டு கம்பி எண்ணும் ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுனர் ஆபாசமாக பெண்ணை திட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் படிப்பு சம்பந்தமாக சென்னைக்கு வந்து தங்கி படித்து வருகிறார். நேற்று காலை வெளிநாட்டை சேர்ந்த பெண் ஆன்லைன் மூலமாக திருவான்மியூர் கடற்கரைக்கு ஆட்டோவை புக் செய்துள்ளார். இறங்கியவுடன் 133 ரூபாய் காண்பித்துள்ள நிலையில், மேலும் 30 ரூபாய் போட்டு கொடுக்குமாறு ஆட்டோ ஓட்டுனர் அந்த வெளிநாட்டு பெண்ணிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு பெண் தரமுடியாது எனக்கூறி 200 ரூபாய் கொடுத்துள்ளார்.
அதற்கு ஆட்டோ ஓட்டுனர் 133 ரூபாய் சில்லறை கொடுக்கும் படி கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ரூபாய் நோட்டை அப்பெண் தூக்கிவீச ஆட்டோ ஓட்டுனர் ஆபாசமாக பேசியதால் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆட்டோ ஓட்டுனர் ஆபாசமாக பேசக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டு, பெண்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை எனவும் யாரும் உதவ முன்வரவில்லை எனவும் தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகளை வைத்து அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுனர் திருவான்மியூரை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பால்பாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


