"தேவர் ஜெயந்தி" - சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்!

 
போக்கு

இன்று தமிழ்நாடு முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களிலுள்ள முத்துராமலிங்கம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடைபெறும். அந்த வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கம் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தேவர் அமைப்பினர் உள்ளிட்டோர் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாள் விழா - தேவர் சிலைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை | Dinamalar

  • சைதாப்பேட்டையிலிருந்து டர்ன் புல்ஸ் பாயின்ட் நோக்கி சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் இணைப்பு சாலை சந்திப்பில் லிங்க் ரோடு, மாடல் ஹட்மென்ட் ரோடு, வி.என்.ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டாமஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு எஸ்.ஐ.டி. மற்றும் கே.பி.தாசன் சாலை வழியாக செல்லலாம்
  • சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் ரோடு (டர்ன் புல்ஸ்) செல்லும் வாகனங்கள் நந்தனம் சிக்னல் சந்திப்பில் வி.என்.ரோடு, சவுத் போக் ரோடு, நார்த் போக் ரோடு, தியாகராய ரோடு, எல்டாமஸ் ரோடு, எஸ்.ஐ.டி. மற்றும் கே.பி.தாசன் ரோடு வழியாக திருப்பி விடப்படும்
  • தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் செனடப் சாலை சந்திப்பில் ஜி.கே.எம். பாலம் நோக்கி கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் பாயின்ட், எஸ்.வி.படேல் சாலை வழியாக செல்லலாம்சென்னையில் 109-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் சிலைக்கு அரசியல்  கட்சியினர் மரியாதை | சென்னையில் 109-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் ...
  • ஜி.கே.எம்.பாலம் ஒரு வழி பாதை- ஜி.கே.எம். பாலம் தெற்கு பக்கம் அண்ணாசாலை- செனடப் சாலை வழியாக ஜி.கே.எம்.பாலம் செல்லலாம். கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் ஜி.கே.எம். பாலம் சர்வீஸ் ரோடு வழியாக வலதுபுறம் நோக்கி டி.டி.கே. ரோடு வழியாக செல்லலாம்
  • சேமியர்ஸ் சாலையில் இருந்து சைதாப்பேட்டை செல்ல விரும்பும் வாகனங்கள் ஜி.கே.எம். பாலம் சர்வீஸ் ரோடு வழியாக காந்தி மண்டபம் பாயின்ட், எஸ்.வி.படேல் சாலை மார்க்கமாக அண்ணாசாலையை அடையலாம் என செய்திக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.