வருங்கால முதல்வர் பொதுச்செயலாளர் ஆனந்த் என போஸ்டர் - மாவட்ட செயலாளர் விளக்கம்!

தவெக பொதுக்குழு கூட்டத்தையொட்டி சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது எதிர்க்கட்சிகளின் சதி என சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. த.வெ.க பொதுக்குழு கூட்டத்தையொட்டி, சென்னை ஈ.சி.ஆரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த போஸ்டரில் வருங்கால முதல்வர் பொதுச்செயலாளர் ஆனந்த் என்ற வாசகம் இடம்பெற்றதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில், தவெக போஸ்டர் சர்ச்சை"சுவரொட்டிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார். மாற்றுக் கட்சியினர் யாரோ செய்த சதி தான் அந்த சுவரொட்டிஎன் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்ஏற்கனவே, தேனியிலும் இதேபோல் சுவரொட்டி ஒட்டி சர்ச்சையானது. தயவுசெய்து நேரடியாக அரசியல் செய்யுங்கள் முதுகில் குத்தாதீர்கள் என கூறியுள்ளார்.