சேரன் தந்தை மரணம் - சீமான் இரங்கல்!!

இயக்குநர் சேரனின் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட மகத்தான திரைக்கலைஞன் அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களின் தந்தையார், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தகை அப்பா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட மகத்தான திரைக்கலைஞன் அன்பு இளவல் இயக்குநர் சேரன் அவர்களின் தந்தையார், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தகை அப்பா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) November 16, 2023
அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்து… pic.twitter.com/VgTZBF1lNG
அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்து ஆளாக்கிய தந்தையின் மறைவு எவராலும் தாங்க இயலாதப் பேரிழப்பாகும். உயிரினும் மேலாக பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி சேரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா பாண்டியன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.