செஸ் ஒலிம்பியாட் 2022 - விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள்!!

 
tn

மாமல்லபுரத்தில் நடைபெறும்  செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னையில் இப்போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை.  ஆனால் தற்போது 44வது சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 தற்போது இந்தியாவில் அதிலும்,   தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறுகிறது.  200 நாடுகளை சேர்ந்த 2000 போட்டியாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். அத்துடன்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

TN
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள தங்கள் நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சென்னை விமான நிலையத்துக்கு வரும் வீரர் மற்றும் வீராங்கனைகள் சென்னை,  செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

tn

இப்போட்டியை காண ஏராளமான வெளிநாட்டு பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் சென்னை விமான நிலையத்தில் ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவர்கள்,  குறிப்பாக செஸ்  ஒலிம்பியாட்  போட்டிக்காக வருபவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய  இந்திய விமான நிலைய ஆணைய முடிவெடுத்துள்ளது. வீரர்கள் ,வீராங்கனைகள் ,பார்வையாளர்கள் சிரமமில்லாமல் சோதனைகளை கடந்து வெளியேற உரிய வசதிகள் செய்யப்படும் என்றும் , குடியுரிமை ,சுங்க சோதனை ,பாதுகாப்பு சோதனை , மருத்துவ பரிசோதனை அனைத்து பிரிவுகளையும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

govt

 உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினர், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எந்தவித இடையூறுகள் தடங்கல் இல்லாமல் அனைத்து வசதிகளுடன் உடனுக்குடன் சென்னை விமான நிலையத்தில் செய்து கொடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.