சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பிகள் இருந்ததால் அதிர்ச்சி!
Nov 25, 2025, 14:07 IST1764059826993
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள வணிக வளாகத்தில் துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்குக் கோகிலா செல்வி என்பவர் 2 சிக்கன் பர்க்கர் வாங்கி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்.
அப்போது அதில் சிறு துண்டுகளாகக் கம்பிகள் இருக்கவே, அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கடையை மூடி விற்பனையை தடை செய்தனர்.


