போலிச்சான்றிதழ் தயாரித்த சிதம்பரம் தீட்சிதர் கைது
Jun 19, 2024, 11:53 IST1718778206652
அண்ணாமலை பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக தீட்சிதர் சங்கர், அவரது உதவியாளர் நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலை பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக தீட்சிதர் சங்கர், அவரது உதவியாளர் நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலை., அண்ணாமலை பல்கலை., கேரளா, கர்நாடகா பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச் சான்றிதழ்கள் தயாரித்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


