தில்லை நடராஜர் கோவிலில் தேரோட்டம் - பக்தர்கள் சூழ விமர்சையாக தொடங்கியது!!

 
ttn

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் கோயிலில் தேரோட்ட பவனி கோலாகலமாக தொடங்கியது. 

ttn

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆருத்ரா தரிசன உற்சவ விழா என்பது மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் சிதம்பரம் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழாவில் 9ம் நாளான இன்று திருத்தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக திருத்தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 

ttn

 அதன்படி குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு இன்று தில்லை நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெற்றது . இதில் பக்தர்கள், சிவனடியார்கள் என அனைவரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ,இசைக்கருவிகள், மங்கள வாத்தியங்கள் முழங்க நடராஜருக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியில் ஆரவாரத்துடன் வந்தார்.  பிள்ளையார், முருக பெருமான், நடராஜர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்கள்  நான்குரத வீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்துச் செல்லப்பட்டது. நடராஜர் தேரில் மூலவர் சாமி காட்சி தருவதால் புகைப்படங்கள் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.