'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' - தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை..

 
stalin

தமிழக அரசின் ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  முத்திரை பதிக்கும் தமிழக அரசன் திட்டங்கள் குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரடியாக ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படியே இன்றைய தினம் இந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்  கூட்டம் நடத்தி வருகின்றார்.  இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தக்கூடிய முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள்,  மாவட்ட அளவில் திட்டத்தின்  பயன்கள், பயனாளிகளை சென்று அடைந்திருக்கிறதா என்பது குறித்தும், துறை ரீதியாக கருத்துக்களை பெற்று, நேரடியாக மண்டல அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட்டதா என்பது   குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தலைமை செயலாளர் இறையன்பு,  அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள்,  தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள்,  பயனாளிகளின் எண்ணிக்கை,  இந்த திட்டத்தை மேம்படுத்தி எப்படி மாற்றி அமைக்கலாம் , பயனாளிகளின் தரப்பு கருத்துக்கள் என்ன என்பது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில்  விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது.   இந்த கூட்டத்தின் முடிவில் திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.