கள ஆய்வில் முதலமைச்சர் : மார்ச் 5,6ல் முதல்வர் 4 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்..

 
stalin
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 5, 6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். 
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம் தேதி தொடங்கினார். இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக சென்று பல்வேறு திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை  ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வு பணியை தொடங்கினார்.
ஸ்டாலின்
இதையடுத்து இம்மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்தினார். இதந்தொடர்ச்சியாக அடுத்த மாதம் மார்ச்  5 மற்றும் 6-ம் தேதிகளில் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசுப் பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.