தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியின் புதிய கட்டடம் திறப்பு

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) காணொலிக் காட்சி வாயிலாக திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையம், அவிநாசி-மங்கலம் சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து, புதிதாக கட்டப்படவுள்ள தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

stalin

கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பி.காம், பி.காம் (CA), பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணினி அறிவியல் (செயற்கை நுண்ணறிவு), பி.எஸ்.சி. (ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன்) ஆகிய பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும். மேலும், இக்கல்லூரி, கணினி ஆய்வகம், ஆடை வடிவமைப்பு ஆய்வகம், கருத்தரங்குக் கூடம், ஸ்மார்ட் கிளாஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டமைப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி

govt

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 35,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி கட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. ஏ. கார்த்திக், இ.ஆ.ப., ஆகியோரும், திருப்பூர் மாவட்டத்தில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்
திரு.க. செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. ந. தினேஷ் குமார், துணை மேயர் திரு. ஆர். பாலசுப்பிரமணியம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.